சென்னை சவுகார்பேட்டையில் உள்ள நகை பட்டறையில் சிலிண்டர் வெடித்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. கடையின் உரிமையாளர் சுமன் பால் சோகித், ஸ்ரீமந்தம்மால் (47), ராகேஷ் (26) ஆகியோர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில், தற்போது சூரஜ் (23) மற்றும் அரவிந்த் (27) ஆகியோரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த விபத்து சதி வேலையால் நடந்ததா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.