சென்னை: சிலிண்டர் வெடித்து மெக்கானிக் கைகள் துண்டானது

கோடம்பாக்கத்தைச் சேர்ந்த ஏசி மெக்கானிக் திலீபன், வரதராஜ பேட்டையில் உள்ள ஒரு ஏசி குடோனில் சிலிண்டர் நிரப்பும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, சிலிண்டர் வெடித்துச் சிதறியதில் அவரது இரு கைகளும் துண்டிக்கப்பட்டன. அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்து தொடர்பாக கோடம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விரைவில் அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி