இந்திய ரயில்வே, 'அம்ரித் பாரத்' திட்டத்தின் கீழ், சென்ட்ரல் பூங்கா ரயில் நிலையத்தை ₹10.68 கோடி செலவில் நவீனப்படுத்தி வருகிறது. நடைமேடைகளில் நவீன கூரைகள், இருக்கைகள், மின்துாக்கிகள், தகவல் பலகை, ஒலிபெருக்கி, கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படுகின்றன. நுழைவுப் பகுதியில் 30 அடி உயரத்தில் மணிக்கூண்டு அமைக்கப்படுகிறது. தெற்கு ரயில்வே அதிகாரிகள், அடுத்த மாதம் இறுதிக்குள் பணிகள் முடிந்து பயன்பாட்டிற்கு வரும் எனத் தெரிவித்துள்ளனர்.