அதன்படி, விண்ணப்பித்த மாணவ, மாணவியர் இன்று முதல் 17ம் தேதி வரை அரசுத் தேர்வுகள் இணைய தளமான www.dge.tn.gov.in என்ற இணைய தளத்துக்கு சென்று பிறந்த தேதியை பதிவு செய்து தாங்கள் விண்ணப்பித்த பாடங்களுக்கான விடைத்தாள் நகல்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்த பிறகு மறுகூட்டல் அல்லது மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், மேற்கண்ட அதே இணைய தளத்தில் மறுகூட்டலுக்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பத்தை பூர்த்தி செய்து இரு நகல்கள் எடுத்து, 16ம் தேதி முதல் 18ம் தேதி வரையில் அந்தந்த மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
மறு கூட்டல் மற்றும் மறு மதிப்பீட்டுக்கான கட்டணத்தை மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் பணமாக செலுத்த வேண்டும். இதற்கான முகவரியும் இணைய தளத்தில் அறிந்து கொள்ளலாம்.