போக்குவரத்து நெரிசல் மிகுந்த சென்னையில் எளிதாகவும் குறைந்த நேரத்தில் பயணம் செய்யும் வகையில் சென்னை மெட்ரோ ரயில் சேவை இருப்பதால் மேலும் 3 வழித்தடங்களில் 118 கி.மீ தொலைவிற்கு மெட்ரோ ரயில் 2ம் கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் சென்னை மெட்ரோ ரயில் சேவை தொடங்கி 10 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில் இதுவரை சராசரியாக 39 கோடி முறை பயணிகள் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் மாதந்தோறும் பயணிப்போரின் எண்ணிக்கை 1 கோடியை விரைவில் தொடும் என கணக்கிடப்பட்டுள்ளது. அதே போல மீதமுள்ள மெட்ரோ பணிகளும் நிறைவடைந்தால் மெட்ரோ பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.