சென்னை: பெண் காவலர்களுக்கு விரும்பும் இடத்தில் பணியிட மாற்றம்

மகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்கு திரும்பும் பெண் காவலர்களுக்கு அவர்கள் விரும்பும் மாவட்டத்தில் 3 ஆண்டுகளுக்கு பணி ஒதுக்கப்படும் என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பின்படி, இதுவரை 209 பெண் காவலர்களுக்கு அவர்கள் விரும்பிய பகுதிக்கு பணி மாறுதல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து வெளியான அறிக்கையில், “மகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்கு திரும்பும் பெண் காவல் ஆளிநர்களுக்கு, அவர்கள் விரும்பும் மாவட்டத்திற்கு பணியிட மாறுதல் வழங்கப்படும் என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்ததைத் தொடர்ந்து, மொத்தம் 209 பெண் காவல் ஆளிநர்கள். தங்களது பேறுகால விடுப்பிற்குப் பிறகு. குழந்தைகளை கவனித்துக்கொள்ள ஏதுவாக, மற்ற மாநகரம்/மாவட்டத்திற்கு பணியிட மாறுதல் கேட்டு விண்ணப்பத்திருந்தனர். 

அதன்படி, 03. 06. 2025 வரை. பணியிட மாறுதல் கோரி விண்ணப்பித்திருந்த மேற்கண்ட 209 பெண் காவல் ஆளிநர்களுக்கும் அவர்கள் விரும்பிய மாநகரம்/மாவட்டத்திற்கு பணியிட மாறுதல் வழங்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி