தண்டையார்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட கொருக்குப்பேட்டையில், பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையான புதிய ரயில்வே மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (பிப்ரவரி 12) திறந்து வைத்தார். சுமார் 96.44 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இந்த மேம்பாலம், 40 ஆண்டுகளாக ரயில்வே கேட் காரணமாக பொதுமக்கள் எதிர்கொண்ட சிரமங்களுக்குத் தீர்வு காணும். இந்தப் பாலம் மூலம் தினசரி 25,000-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தடையின்றி செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.