மணலி புதுநகரில் ரூ. 22 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய நூலகத்தை தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் திறந்து வைத்தார். மணலி மண்டலம், 15வது வார்டு மணலி புதுநகரில் மாவட்ட கிளை நூலகம் உள்ளது. இங்கு டிஎன்பிசி, ஐஏஎஸ், நீட், சட்டம் மற்றும் அனைத்து கல்லூரி மற்றும் மாணவ, மாணவிகளுக்கு தேவையான 30460 புத்தகங்கள் உள்ளன. நூலகத்தை 3432 உறுப்பினர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான வாசகர்கள், மாணவ, மாணவிகள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நூலகம் போதிய அடிப்படை வசதி இல்லாமல் இருப்பதால் இதனை விரிவுபடுத்த வேண்டும், என்று வார்டு கவுன்சிலர் நந்தினி சண்முகம், மண்டல குழு கூட்டத்தில் தலைவர் ஏ. வி. ஆறுமுகம் முன்னிலையில் கோரிக்கை வைத்து இதற்கான தீர்மானமும் கொண்டு வந்தார்.