அப்போது, மெரினா காமராஜர் சாலை கண்ணகி சிலை அருகே, 2 இருசக்கர வாகனங்களில் வந்த 3 பேர் மகாதீர் முகமதுவை வழிமறித்தனர். அவர்கள் தங்களை போலீஸ் என அறிமுகம் செய்து கொண்டு, அவரது பையை சோதனை செய்தனர். அப்போது, அவரது பையில் இருந்த ரூ. 10 லட்சம் பணத்தையும், இருசக்கர வாகனத்தின் சாவியையும் எடுத்துக்கொண்டு, காவல் நிலையம் வந்து பெற்றுக் கொள்ளும் படி கூறிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.
இதையடுத்து, மெரினா காவல் நிலையம் சென்ற மகாதீர் முகமது, போலீஸாரிடம் நடந்த சம்பவம் குறித்து தெரிவித்தார். அதன் பிறகு தான் 3 மர்ம நபர்கள், அவரை ஏமாற்றி பணத்தை கொள்ளையடித்துவிட்டு சென்றது தெரியவந்தது. இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் அவர்களை தேடி வந்தனர்.
3 பேரையும் கைது செய்த போலீஸார், அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் வழிப்பறி செய்த பணத்தில் தங்க நகைகள், வீட்டு உபயோக பொருட்கள் வாங்கியது தெரியவந்தது.