சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டில், வாரிசு சான்றிதழ் வழங்க ரூ. 4,000 லஞ்சம் வாங்கிய மாம்பலம் - கிண்டி தாசில்தார் அலுவலக தற்காலிக இளநிலை உதவியாளர் மூர்த்திக்கு 3 ஆண்டு சிறை, ரூ. 2,000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், அவருக்கு உடந்தையாக இருந்த சுகுமாருக்கு 1 ஆண்டு சிறை, ரூ. 1,000 அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த வழக்கு விருகம்பாக்கத்தை சேர்ந்த ஜான்சிராணி அளித்த புகாரின் பேரில் தொடரப்பட்டது.