சென்னை: விபத்தில் காதலனின் கைகள் துண்டானது.. காதலி கண்ணீர்

கோடம்பாக்கத்தில் ஏ.சி மெக்கானிக்காக பணிபுரியும் திலீபன், நேற்று பணியின் போது சிலிண்டர் வெடித்ததில் இரு கைகளையும் இழந்தார். ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்த பெண்ணுடன் சமீபத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், இந்த விபத்து நடந்துள்ளது. திலீபனின் காதலி கண்ணீருடன் மருத்துவமனையில் கலங்கி நிற்கிறார். திலீபனின் குடும்பத்தினர் அவரது வருமானத்தையே நம்பி வாழ்ந்து வருவதால், இந்த விபத்து அவர்களுக்கு பெரும் இழப்பாக அமைந்துள்ளது.

தொடர்புடைய செய்தி