உயிருக்கு போராடிய அவரை, அவ்வழியாக வந்தோர் மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து மடிப்பாக்கம் போலீசார் விசாரித்தனர். இதில், மணிவண்ணனுடன் பணிபுரிந்த குணால் என்பவருக்கும் இவருக்கும், சமீபத்தில் சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் குணால், தன் நண்பர்களுடன் சேர்ந்து மணிவண்ணனை கொலை செய்ய முயற்சித்தது தெரிந்தது.
இதையடுத்து கீழ்ப்பாக்கம், மண்டபம் சாலையைச் சேர்ந்த குணால், அண்ணா நகர் கிழக்கு குஜ்ஜி தெருவைச் சேர்ந்த ரித்திக், ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து இரு கத்தி, இரண்டு பைக்குகளை பறிமுதல் செய்த போலீசார், தலைமறைவான இருவரை தேடி வருகின்றனர்.