சென்னை அமைந்தகரை அண்ணா ஆர்ச் அருகே உள்ள அண்ணா சிலையில் தவெக கொடி வைக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு திமுக மற்றும் அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சட்டப்பேரவை தேர்தலில் தவெக அதிக இடங்களை பெற்று தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.