மாவட்ட வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்தவும், நலத்திட்ட உதவிகளை கண்காணிக்கவும், இயற்கைச் சீற்றம் மற்றும் நோய்த்தொற்று காலங்களில் பணிகளை கூடுதலாக மேற்கொள்ளவும் தமிழக அரசு அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்களை நியமித்து உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் என். ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நியமிக்கப்பட்டுள்ளார்.