சென்னை முகப்பேரில் உள்ள மண்டபம் அருகே 'காங்கிரஸ் உரிமை மீட்பு குழு' என்ற பெயரில், அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்றும், அதிகாரத்தில் பங்கு தரும் கட்சியுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்றும் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த போஸ்டர்கள் சில இடங்களில் கிழிக்கப்பட்டதும் பரபரப்பை அதிகரித்துள்ளது.