கோடம்பாக்கத்தில் பைக் மீது அரசு பஸ் மோதியதில் மூவர் காயம்

சென்னையில் அரசுப் பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் உள்பட 3 பேர் மீது காயமடைந்தனர். இன்று காலை திருவேற்காட்டிலிருந்து தி.நகர் நோக்கி சென்ற அரசுப் பேருந்து கோடம்பாக்கம் அருகே வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் நடந்து சென்ற நபர் மற்றும் டூவீலரில் சென்ற பெண் மீது மோதியது. இதில் டூவீலருடன் பேருந்துக்கு அடியில் சிக்கிய பெண் படுகாயமடைந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். தப்பியோடிய பேருந்து ஓட்டுநரைத் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி