ராயப்பேட்டை, பி. எம். தர்கா இஸ்மாயில் மைதானம் அருகே, போலீசார் மே 6 காலை கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தபோது, திருவல்லிக்கேணியைச் சேர்ந்த பிரகாஷ்(22) என்பவர் போதை மாத்திரைகளை விற்று வந்தது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார், 460 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். விசாரணையில், மும்பையிலிருந்து போதை மாத்திரை வாங்கி வந்து சென்னையில் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.