சென்னை: கணவரைப் பிரிந்து மகளுடன் வசித்து வந்த முனிரா, தனது தோழி சமந்தாவை 6 மாதங்களாக வீட்டில் தங்க வைத்திருந்தார். இந்நிலையில், சமந்தா முனிராவின் 5 சவரன் நகையைத் திருடிச் சென்றார். போலீசார் நடத்திய விசாரணையில், திருடிய நகையை அடகு வைத்து 3 லட்சம் ரூபாய் பணம் பெற்றதும் தெரியவந்தது. இதையடுத்து, இளம்பெண் சமந்தாவை போலீசார் கைது செய்தனர்.