சென்னையில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி, இன்று மாலை முதல் நகரின் பல்வேறு பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இரவு 7 மணி முதல் சென்னை, ராயப்பேட்டை, ஆயிரம் விளக்கு, அண்ணா சாலை, மணி கூண்டு, ஜாம் பஜார் உள்ளிட்ட இடங்களில் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.