ராயப்பேட்டை பகுதியில் மழை காரணமாக போக்குவரத்து நெரிசல்

சென்னையில் இன்று (மே 16) மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதற்கேற்ப, காலை முதல் மேகமூட்டத்துடன் காணப்பட்ட வானம் மாலையில் இருந்து மழையாகப் பெய்யத் தொடங்கியது. விட்டு விட்டு பெய்து வரும் மழையால், வேலை முடிந்து வீடு திரும்புவோர் சிரமத்திற்கு ஆளாகினர். குறிப்பாக ராயப்பேட்டை பகுதியில் பெய்த கனமழை காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி