சென்னை மெரினா கடற்கரையின் நீலக் கொடி பகுதியில் இன்று மாலை 5.30 மணிக்கு பாரம்பரிய கலைவிழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் கைச்சிலம்பாட்டம், கிராமிய பாடல், நாட்டிய நிகழ்ச்சி, கரகம், ஒயிலாட்டம், மயிலாட்டம், பறையாட்டம் உள்ளிட்ட பல்வேறு நாட்டுப்புறக் கலைகள் அரங்கேற உள்ளன. இந்த வார விடுமுறையை கொண்டாடி மகிழ இது ஒரு சிறந்த பொழுதுபோக்கு நிகழ்வாகும்.