சென்னை: மனநலம் பாதிக்கப்பட்ட மாணவிக்கு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது

சென்னை சிந்தாதிரிப்பேட்டை பகுதியை சேர்ந்த இம்ரான் (30) என்பவர், திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட 19 வயது மாணவியை மோட்டார் சைக்கிளில் கடத்திச் சென்று மெரினா கடற்கரையில் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக திருவல்லிக்கேணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து இம்ரானை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி