சென்னை: மாநிலங்களவைத் தேர்தல்: 6 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு

தமிழகத்தில் மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று (ஜூன் 10) நடைபெற்ற நிலையில், அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 6 பேரின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன என்றும், 7 சுயேச்சைகளின் வேட்புமனுக்கள் செல்லாதவை என்றும் தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழக சட்டப் பேரவையின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை வாக்காளர்களாகக் கொண்டு மாநிலங்களவைக்கு 6 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க ஜூன் 19-ல் நடைபெறும் தேர்தலுக்காக வரப்பெற்ற வேட்பு மனுக்கள் இன்று (ஜூன் 10) முற்பகல் 11 மணிக்கு ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. ஆய்வுக்குப் பின், ஐ.எஸ். இன்பதுரை (அதிமுக), ம. தனபால் (அதிமுக), கமல்ஹாசன் (மநீம), எஸ்.ஆர். சிவலிங்கம் (திமுக), கவிஞர் சல்மா (எ) ராஜாத்தி, பி. வில்சன் ஆகிய 6 வேட்பாளர்கள் அளித்த வேட்பு மனுக்கள் செல்லத்தக்கவை என அறிவிக்கப்படுகிறது. 

மேலும், அக்னி ஆழ்வார், கண்டே சயன்னா, ரெ. கந்தசாமி, சுப்பிரமணியன், பத்மராஜன், மேஷாக் கிருபாகரன் மற்றும் கே.பி.எம். ராஜா ஆகிய 7 சுயேட்சை வேட்பாளர்களால் அளிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி