தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு ஆதரவாக மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்தப்போவதாக சமூக வலைதளங்களில் தவெக தொண்டர்கள் மற்றும் இளைஞர்கள் தகவல் பரப்பி வருவதாக கூறப்படுகிறது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மெரினாவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்திலும், விஜய் ரசிகர்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.