பணி இடை நீக்கத்தில் உள்ள காவலர்களை பணிக்கு அழைக்க திட்டம்

தமிழக காவல்துறை, நீண்டகாலமாக பணியிடை நீக்கத்தில் உள்ள காவலர்களை மீண்டும் பணியில் சேர்க்க உத்தரவிட்டுள்ளது. பணியிடை நீக்க வழக்குகளை ஆய்வு செய்து, தகுதியானவர்களை மீண்டும் பணியில் அமர்த்த காவல் உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக விரிவான அறிக்கையை வரும் பிப்ரவரி 13 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கவும் டிஜிபி உத்தரவிட்டுள்ளார். பணியில் இல்லாத காலக்கட்டத்தில் காவலர்களுக்கு ஊதியம் வழங்கக்கூடிய சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி