மயிலாப்பூர் நொச்சிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (50) என்பவர், தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 11 வயது சிறுமிக்கு சாக்லேட் வாங்கி கொடுத்து பேசி வந்துள்ளார். நேற்று (மே 17) அதிகளவில் சாக்லேட் வாங்கி தருவதாகவும், பணம் தருவதாகவும் ஆசை வார்த்தை கூறி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீசார் ரமேஷை கைது செய்துள்ளனர்.