சாந்தோம் தேவாலயம் பின்புறம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த மயிலாப்பூர் போலீசார், முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்த ஒரு வாலிபரை விசாரித்தபோது, அவரிடமிருந்து 35 கிராம் ஹெராயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. மேற்கு திரிபுராவைச் சேர்ந்த குத்துஸ் மியா என்ற அந்த வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.