சென்னை மயிலாப்பூர் அருகே உள்ள முண்டக்கன்னியம்மன் கோயில் பறக்கும் ரயில் நிலையத்தில் திடீரென லிப்ட் கோளாறு ஏற்பட்டது. இதனால் லிப்ட் உள்ளே சிக்கிய பொதுமக்கள் அலறினர். இதனிடையே உள்ளே சிக்கிய பயணிகளை தீயணைப்புப் படையினர் பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.