இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரிக்க காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டார். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இதில், ஆள்மாறாட்டம் மற்றும் போலி ஆவணங்கள் மூலம் ரூ. 5 கோடி மதிப்புடைய வீட்டுடன் கூடிய நிலத்தை அபகரித்தது கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த கலைச்செல்வி (59), சென்னை கோடம்பாக்கம் பாரதீஸ்வரர் காலனியைச் சேர்ந்த ஸ்ரீதர் (60) என்பது தெரியவந்தது. முதல் கட்டமாக கடந்த ஆண்டு ஏப்ரல் 26-ம் தேதி கலைச்செல்வி கைது செய்யப்பட்டார். இந்நிலையில், தொடர்ந்து தலைமறைவாக இருந்த ஸ்ரீதரை நேற்று முன்தினம் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர். பின்னர், நீதிமன்றக் காவலில் அவரை சிறையில் அடைத்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த நபருக்கு 7 ஆண்டுகள் சிறை