சென்னையில் 48ரயில் நிலையத்தில் டிஜிட்டல் தகவல் பலகை அமைப்பு

தெற்கு ரயில்வே சென்னை கோட்டத்தில் உள்ள 48 புறநகர் ரயில் நிலையங்களில் பயணிகளின் வசதிக்காக நவீன டிஜிட்டல் அறிவிப்பு பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பலகைகள் ரயில் வருகை மற்றும் புறப்படும் நேர விவரங்களை உடனுக்குடன் வழங்கும். வேளச்சேரி, பழவந்தாங்கல், குரோம்பேட்டை, பல்லாவரம், திருவான்மியூர், நுங்கம்பாக்கம், வில்லிவாக்கம், சைதாப்பேட்டை, கோடம்பாக்கம், மீஞ்சூர், தாம்பரம், சானடோரியம், கோட்டை, திருவொற்றியூர், கொரட்டூர், சேத்துப்பட்டு, வியாசர்பாடி ஜீவா, தரமணி, திரிசூலம், அண்ணனூர், பட்டர வாக்கம், திருமயிலை, மீனம்பாக்கம், பெரம்பூர், லோகோ ஒர்க்ஸ், சேப்பாக்கம், கலங்கரை விளக்கம், சிந்தாதிரிப்பேட்டை, அத்திப்பட்டு, கஸ்தூரிபாய் நகர், பெருங்குடி உள்ளிட்ட நிலையங்களில் இவை நிறுவப்பட்டுள்ளன. எல்.இ.டி. திரைகள் பயன்படுத்தப்பட்டுள்ளதால், அதிக நெரிசல் நேரங்களிலும், பல்வேறு வெளிச்ச நிலைகளிலும் தெளிவாகத் தெரியும். இது தினசரி பயணிகள், முதியவர்கள் மற்றும் முதன்முறையாக பயணம் செய்பவர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி