சென்னை மயிலாப்பூர் பகுதியில் சுற்றித் திரிந்த ஒரு வீட்டு நாய், அப்பகுதி மக்களால் அடித்துக் கொல்லப்பட்டு குப்பைத் தொட்டியில் வீசப்பட்டுள்ளது. நாயின் உரிமையாளர்கள் அதிகாலையில் தேடி அலைந்தபோது, குப்பைத் தொட்டியில் நாயின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். யார் இந்த கொலையை செய்தார்கள் என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.