சென்னை - நுங்கம்பாக்கத்தில் மேம்படுத்தப்பட்ட பூங்கா திறப்பு

சென்னை நுங்கம்பாக்கத்தில் தனியார் மகளிர் கல்லூரியின் சார்பில் 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டுள்ள பெருநகர சென்னை மாநகராட்சி பூங்காவினை திறந்து வைத்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சென்னை நுங்கம்பாக்கத்தில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் எம். ஒ. பி. வைணவ மகளிர் கல்லூரியின் சார்பில் 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டுள்ள பெருநகர சென்னை மாநகராட்சி பூங்காவினை திறந்து வைத்து பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே. என். நேரு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, சட்டமன்ற உறுப்பினர் நா. எழிலன், துணை மேயர் மு. மகேஷ் குமார், மாநகராட்சி ஆணையர் ஜெ. குமரகுருபரன், நிலைக் குழுத் தலைவர் (பணிகள்) நே. சிற்றரசு, எம். ஓ. பி. வைணவ கல்லூரி முதல்வர் முனைவர் அர்ச்சனா பிரசாத், துணை ஆணையர் (பணிகள்) வி. சிவகிருஷ்ணமூர்த்தி, மத்திய வட்டார ஆணையர்கே. ஜெ. பிரவீன்குமார், மாமன்ற உறுப்பினர் நந்தினி உள்பட கல்லூரி மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர், என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி