சென்னை கே.கே. நகரத்தைச் சேர்ந்த ரவுடி முரளி, தனது அக்கா மகனுக்கு மாரியம்மாள் என்பவரிடம் அவரது பேத்தியை திருமணம் செய்து வைக்குமாறு கேட்டுள்ளார். இதற்கு மாரியம்மாள் மறுப்பு தெரிவித்த நிலையில், மாரியம்மாளை முரளி அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த மாரியம்மாள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து, முரளியை போலீசார் கைது செய்தனர்.