சென்னை: ஆயிரம் இடங்களில் முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்படும்..

தமிழகம் முழுவதும் ஆயிரம் இடங்களில் முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 

ஏழை,எளிய மக்கள் பயன்பெறும் வகையில், சென்னை உட்பட மாநிலம் முழுவதும் சுமார் 1000 இடங்களில் அரசு சார்பில் முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்படவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. வரும் 24ம் தேதி சென்னையில் இந்த திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கும் வகையில், முதல் மருந்தகத்தை திறந்து வைக்கவுள்ளார். இந்த மருந்தகங்களில் மிகக் குறைந்த விலையில் மருந்து, மாத்திரைகள் கிடைக்கும் என்றும், இதன் மூலம் மக்கள் அதிக அளவில் பயன்பெறுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி