கோயம்பேடு சந்தையில் ₹50,000 திருட்டு: ஊழியர் கைது

சென்னையில், சைதாப்பேட்டையைச் சேர்ந்த பழ வியாபாரி ஹலீல் அகமது(52) கடந்த 28ம் தேதி கோயம்பேடு சந்தையில் உள்ள தனது கடையில் வைத்திருந்த 68,000 ரூபாயில் 50,000 ரூபாய் திருடு போனதாக புகார் அளித்தார். இதுகுறித்து கோயம்பேடு போலீசார் நடத்திய விசாரணையில், கடையில் பணிபுரிந்த கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விஜய்(28) என்பவரை கைது செய்து, பணத்தை மீட்டனர்.

தொடர்புடைய செய்தி