திமுக அரசின் அலட்சியப் போக்கைக் கண்டித்து ஏபிவிபி சார்பில், சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கேட்டு போராட்டம் நடத்தப்பட்டது. சென்னையில் போராட்டம் நடத்திய, ஏபிவிபி-ன் வட தமிழக மாநில செயலாளர் யுவராஜ் தாமோதரன் உள்பட மாணவர்களை, ஏபிவிபி மாநில அலுவலகத்தில் டிச. 27-ம் தேதி அதிகாலை 20-க்கும் மேற்பட்ட போலீசார், தேசவிரோதிகளை கைது செய்வதைப் போல கைது செய்துள்ளனர். காவல்துறையின் இந்த அடக்குமுறை வன்மையாக கண்டிக்கத்தக்கது.
திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து நீதி கேட்டு போராடும் மக்களின், குறிப்பாக மாணவர்களின் உரிமை பறிக்கப்பட்டுள்ளது. அகில பாரதிய விதயார்த்தி பரிஷத் மாணவர் அமைப்பு திமுக அரசின் உருட்டல் மிரட்டலுக்கு ஒருகாலமும் அஞ்சாது. பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை ஏபிவிபி-யின் போராட்டம் தொடரும் என கூறப்பட்டுள்ளது.