ஒரு நல்ல விஷயம் நடந்தால் ஆதரிக்கிறோம். தவறு நடந்தால் அதை சுட்டிக்காட்டுகிறோம். முன்மொழி கொள்கையை பொருத்தவரை தாய்மொழி காப்போம். அனைத்து மொழிகளையும் கற்போம் என்று விஜயகாந்த் சொல்லிக் கொடுத்திருக்கிறார். அந்த வழியில் தான் நாங்கள் பயணிக்கிறோம். தமிழகம் முழுவதும் தமிழ் கட்டாயம் ஆக்கப்பட வேண்டும் என்பதை அரசுக்கு வேண்டுகோளாக வைக்கிறேன். தொகுதி சீரமைப்பு என்ற பெயரில் ஒரு தொகுதியை மத்திய அரசு குறைத்தால் கூட மக்களுக்காக தமிழக அரசுடன் இணைந்து அதை எதிர்ப்போம். மேலும், மாநிலங்களவை சீட் தொடர்பாக மீண்டும், மீண்டும் அதே கேள்வியை கேட்கிறீர்கள். இதற்கான பதிலை நான் பல்வேறு இடங்களில் சொல்லிவிட்டேன். அதேபோல், தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ளது. அடுத்த ஆண்டு பிறந்த நாளில் கூட்டணி குறித்து உறுதியாக அறிவிக்கிறேன் என அவர் பேசினார்.
திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல அனைத்து தரப்பினருக்கும் அனுமதி