பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது, சட்டப்பேரவை தேர்தலுக்கு ஓராண்டுக்கு மேல் உள்ளது. யாருடன் கூட்டணி என்பதை இந்த நேரத்தில் பேச முடியாது. தமிழகத்தில் கூட்டணி இன்றி தனியாக எந்த கட்சிகளும் ஆட்சியை பிடிக்க முடியாது. பாஜக-அதிமுக கூட்டணிக்கு வர வேண்டுமென டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அனைவரும் ஒன்று சேர்ந்தால் அது பலம்தான். ஆனால், இதுகுறித்து அதிமுகதான் முடிவெடுக்க வேண்டும். நாடாளுமன்றம், சட்டப்பேரவையில் மக்கள் பிரச்னைகள் குறித்து பேசாமல், இரு கட்சிகளும் நேரத்தை வீணடித்து வருகின்றன. 234 தொகுதிகளிலும் தேமுதிக அமைக்கும் கூட்டணி வெற்றிபெறும். உள்ளாட்சித் தேர்தலுக்கும், 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கும் தேமுதிக தயாராக உள்ளது. விஜயகாந்த் முதலாமாண்டு நினைவு தின பேரணிக்கு திமுக, அதிமுக உட்பட அனைத்து கட்சியினரையும் அழைக்க உள்ளோம் என அவர் கூறினார்.
8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை