அண்ணாநகரில் வாகன நிறுத்த மேலாண்மை திட்டம்

சென்னை அண்ணாநகரில் வாகன நிறுத்த மேலாண்மை திட்டம் வரும் செப்டம்பரில் அமலுக்கு வர உள்ளது. இதன்படி, கனரக வாகனங்களுக்கு ரூ. 60, கார்களுக்கு ரூ. 40, இருசக்கர வாகனங்களுக்கு ரூ. 20 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கும்டா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஸ்மார்ட் பார்க்கிங் திட்டப்படி அண்ணா நகரின் பிரதான சாலைகள், குடியிருப்பு சாலைகள் என 25 கி.மீ. நீளம் கொண்ட பகுதியில் 2 ஆயிரம் பார்க்கிங் பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 

இவற்றில் கனரக சரக்கு வாகனங்களுக்கு ஒரு மணி நேரத்துக்கு ரூ. 60, கார் உள்ளிட்ட இலகுரக 4 சக்கர வாகனங்களுக்கு ரூ. 40, இருசக்கர வாகனங்களுக்கு ரூ. 20 பார்க்கிங் கட்டணமாக வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. குடியிருப்பு சாலைகளில் நிறுத்தப்படும் கார்களுக்கு ஒரு மணி நேரத்துக்கு ரூ. 20, இருசக்கர வாகனங்களுக்கு ரூ. 10 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

பார்க்கிங் கட்டணம் வசூலிக்கும் 100 பணியாளர்களுக்கும் உடலில் பொருத்திக் கொள்ளும் வகையில் கேமராக்கள் வழங்கப்பட உள்ளன. இதன் மூலம் கட்டணம் செலுத்தாமல் வாக்குவாதத்தில் ஈடுபடுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி