இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்தியாவில் உள்ள மாநிலங்களில் பொருளாதார வளர்ச்சியில் முன்னிலைப் பெற்றிருக்கும் தமிழ்நாடு, தனது வளர்ச்சியை அதிகப்படுத்தவும், நிதித் தற்சார்பை பெறுவதற்கும் வழிவகுக்கும் நிதிநிலை அறிக்கையாக இந்த ஆண்டு "பட்ஜெட்" அமைந்துள்ளது. இதனை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரவேற்கிறோம்.
தமிழ்நாடு அரசின் பொருளாதார அணுகுமுறையை மதிப்பிடும் வல்லுநர்கள், அதில் பட்டியல் இனத்தவர்/ பழங்குடியினர் உள்ளிட்ட விளிம்பு நிலை மக்களை உள்ளடக்குவதில் இருக்கும் போதாமையைச் சுட்டிக்காட்டுகின்றனர். அதுபோலவே நிதி வருவாய்ப் பெருக்கத்தில் தமிழ்நாடு அரசு பின்தங்கி இருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த பட்ஜெட்டைப் பார்க்கும் போது நிதி வருவாய்ப் பெருக்கத்துக்குத் தமிழ்நாடு அரசு அக்கறை எடுத்துக் கொண்டிருப்பதைக் காண முடிகிறது.
ஒட்டுமொத்தத்தில் வளர்ச்சிக்கும் தற்சார்புக்கும் வழிவகுக்கும் இந்த பட்ஜெட்டை விசிக சார்பில் வாழ்த்தி வரவேற்கிறோம்’ எனத் தெரிவித்துள்ளார்.