சென்னை: குரூப் 2, குரூப் 2 ஏ முதன்மைத் தேர்வுகள் தள்ளி வைப்பு

சென்னை அரும்பாக்கம், நந்தனம் தேர்வு மையங்களில் குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வர்களுக்கு பதிவெண் இல்லாததால் ஆயிரக்கணக்கானோர் குழப்பமடைந்தனர். அதிகாரிகள் நந்தனம் செல்ல அறிவுறுத்திய நிலையில், நேரம் கருதி தேர்வர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன் விளைவாக, சென்னையில் மட்டும் நடைபெறவிருந்த தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டன. பின்னர், தமிழ்நாடு முழுவதும் நடைபெறவிருந்த குரூப் 2, 2ஏ தேர்வுகள் தள்ளிவைக்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி தலைவர் அறிவித்துள்ளார். மாற்று தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

தொடர்புடைய செய்தி