சென்னை: வரும் 27ல் தர்ணா.. சுகாதார ஆய்வாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு

1, 640 சுகாதார ஆய்வாளர் நிலை-2 பணியிடங்களை நிரப்பக் கோரி, மார்ச் 27ம் தேதி தமிழகம் முழுவதும் தர்ணா நடைபெறும் என்று தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் ப. குமார் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், பொது சுகாதாரத் துறையில் துணை சுகாதார நிலைய அளவில் பணிபுரியும் சுகாதார ஆய்வாளர் நிலை-2 பணியிடங்கள் கிட்டத்தட்ட 100 சதவீத இடங்களும் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன.

இதுவரை புதிய அறிவிப்பாணை வெளியிடப் படவில்லை. 100 சதவீத பணியிடங்களும் அதாவது சுமார் 1, 640 இடங்களும் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன.

இந்நிலையில் இப்பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக இரண்டு கட்ட போராட்டங்களை நடத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக, வரும் 27ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மாலைநேர தர்ணா நடத்துவது, கோரிக்கை களை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல மாவட்ட ஆட்சி தலைவரிடம் மனு அளிப்பது மற்றும் 2ம் கட்டமாக ஏப். 9ம் தேதி சென்னையில் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி