சென்னை: தீபாவளி ஊக்கத்தொகை; ராமதாஸ் கருத்துக்கு அமைச்சர் கண்டனம்

போக்குவரத்துக்கழக தொழிலாளர்களுக்கு இன்றைக்குள் தீபாவளி ஊக்கத்தொகையை வழங்க வேண்டும் என வலியுறுத்தி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை உண்மைக்கு புறம்பானது என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு போக்குவரத்துக் கழகங்கள் மிகுந்த நிதி நெருக்கடியில் இருகின்ற நிலையிலும் முதல்வர், தமிழ்நாடு அரசின் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 741, C மற்றும் D பிரிவு பணியாளர்களுக்கு, 8. 33% போனஸ் மற்றும் 11. 67% கருணைத் தொகையாக ரூ. 182. 32 கோடி வழங்குவதற்கு உத்தரவிட்டு. அரசு ஆணை எண்: 310, நிதித் துறை நாள்: 14/10/2024, வாயிலாக, நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டு, அரசு ஆணை (நிலை) எண்: 124, போக்குவரத்துத் துறை நாள்: 25/10/2024 ன்படி உரிய நிதி ஒதுக்கீடு செய்து, ரூ. 182. 32 கோடி போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

இதனை அறிந்தும், அறியாததுபோல ராமதாஸ் எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளது தேவையற்றது. நடுநிலையாளர்களும், பிற மாநிலத்தை சார்ந்தவர்களும், வெளிநாட்டவர்களும் அரசின் செயல்பாடுகளை வெகுவாக பாராட்டி வருகிறார்கள். அதை பொறுத்துக்கொள்ள மனமில்லாமலும், வேறு அரசியல் செய்ய வழி இல்லாமலும் உண்மைக்கு புறம்பாக அறிக்கை வெளியிட்டுள்ளது கண்டனத்திற்குறியதாகும் என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி