சென்னை: ஓ.பன்னீர்செல்வம் கார் ஓட்டுநர் விளக்கம்

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கார் ஓட்டுநர் வீடியோ இணையத்தில் வைரலானது. இது குறித்து ஓட்டுநர் விளக்கமளித்துள்ளார். "வண்டியை ஓரமாக நிறுத்தச் சொன்ன ஐயா, பின்னால் வாகனங்கள் வருவதால் சீக்கிரம் பூங்கொத்தை எடுத்துக்கொண்டு வண்டியை எடுக்குமாறு கூறினார். அங்கு வேறு யாரும் இல்லாததால், நானே சீட் பெல்ட்டை கழற்றிவிட்டு வேகமாகச் சென்று அந்தப் பூங்கொத்தை எடுக்கச் சென்றேன். இதையே ஒரு பெரிய செய்தியாகப் பரப்பி வருகிறார்கள். என் பிழைப்பில் ஏன் மண்ணள்ளிப் போடுகிறீர்கள்? நான் எப்போதும் ஐயாவுடன்தான் இருப்பேன்" என்று அவர் உருக்கமாகத் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி