சென்னையை அடுத்த தாம்பரம் பேருந்து நிலையத்தில், செல்போன் காணாமல் போனதாக புகார் அளிக்க வந்த இளைஞர் தினேஷை, உதவி ஆய்வாளர் செந்தில்குமார் காவல் நிலையம் செல்லுமாறு கூறியதால் ஆத்திரமடைந்த தினேஷ், போதையில் செந்தில்குமாரை சரமாரியாக தாக்கியுள்ளார். பொதுமக்கள் அவரை பிடித்து தாம்பரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். முதற்கட்ட விசாரணையில் இந்த தகவல்கள் தெரிய வந்துள்ளன.