சென்னையில் மர்மமான முறையில் காகங்கள் உயிரிழந்தது குறித்து கால்நடை பராமரிப்புத் துறை ஆய்வு மேற்கொண்டது. ஜனவரி மாதம் சேகரிக்கப்பட்ட மாதிரிகள் போபால் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டு, 'H5N1' பறவைக் காய்ச்சலால் காகங்கள் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. காகங்கள் இறந்த பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மக்கள் இறந்த பறவைகளை வெறும் கையால் தொடாமல், புதைக்கவோ அல்லது எரிக்கவோ அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த பறவைக் காய்ச்சல் மனிதர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.