த.வெ.க. ஆட்சியமைத்து தமிழக முதல்வருடன் 9 அமைச்சர்கள் பொறுப்பேற்றனர். ஆனால் யாருக்கும் துறைகள் ஒதுக்கப்படாமல் இருந்தது. இந்தநிலையில் அமைச்சரவையில் 9 பேருக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதன்படி முதலமைச்சர் ஜோசப் விஜய் காவல், உள்துறை, பொதுநிர்வாகம், மகளிர் நலன், இளைஞர் நலன், மாற்றுத்திறனாளிகள் நலன், நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கல் ஆகிய துறைகளை கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.