சென்னை: நடிகர் அஜித் தாய் மறைவு.. முதல்வர் விஜய் இரங்கல்

நடிகர் அஜித்குமாரின் தாய் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு முதல்வர் விஜய் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், "அருமை நண்பர் அஜித் குமார் அவர்களின் தாயார் திருமதி மோகினி அம்மையார் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன். வாழ்வில் அனைத்து நிலைகளிலும் அரணாக இருந்து அரவணைத்த தாயாரை இழந்து வாடும் நண்பர் திரு. அஜித் குமார் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி