சென்னையில் சமீப நாட்களாக பறவை காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. எச்5என்1 வைரஸ் தொற்று தான் இதற்குக் காரணம் என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. சென்னையில் தொற்று பரவல் அதிகரித்துள்ளதால், காகங்கள் இறந்தால் அவற்றை கைகளில் தொட வேண்டாம் என முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக சென்னையில் காகங்கள் தொடர்ந்து இறந்து வருவது குறிப்பிடத்தக்கது.