எம்.எஸ்.தோனியை Uncapped Player ஆக தக்கவைத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. சர்வதேச போட்டிகளில் விளையாடி 5 ஆண்டுகளை கடந்த இந்திய வீரர்களை uncapped ஆக தக்க வைக்கலாம் என்ற விதிப்படி, ரூ.4 கோடிக்கு தோனியை தக்கவைத்துள்ளது சிஎஸ்கே அணி. இதன் மூலம், அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெற உள்ள ஐபிஎல் 18-வது சீசனில் தல தோனி விளையாடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, தல ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.